/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஓ.எம்.ஆர்., சாலை மையத்தடுப்பில் மண் குவியலால் விபத்து அபாயம்
/
ஓ.எம்.ஆர்., சாலை மையத்தடுப்பில் மண் குவியலால் விபத்து அபாயம்
ஓ.எம்.ஆர்., சாலை மையத்தடுப்பில் மண் குவியலால் விபத்து அபாயம்
ஓ.எம்.ஆர்., சாலை மையத்தடுப்பில் மண் குவியலால் விபத்து அபாயம்
ADDED : ஜூன் 25, 2024 04:54 AM

திருப்போரூர், : திருப்போரூர் ஒன்றியத்தில், ஆலத்துார் முதல் சிறுசேரி வரை உள்ள ஓ.எம்.ஆர்., சாலையில், தண்டலம், திருப்போரூர், காலவாக்கம், கேளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், மையத்தடுப்பு ஓரம் மண் குவிந்துள்ளது.
இந்த மண் குவியலால், வாகனங்கள் செல்லும்போது துாசு பறந்து, பின்னால் இரு சக்கர வாகனங்களில் செல்வோரின் கண்களை பதம்பார்க்கின்றன. நீண்ட நாட்களாக மண் குவியலை அகற்றாததால், சில இடங்களில் உள்ள மண் குவியலில், செடிகள் மற்றும் புல் முளைத்துள்ளது.
எனவே, சாலை மையத்தடுப்பு அருகே உள்ள மண் குவியல்களை அகற்ற, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.