/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அதிகரிக்கும் கனரக வாகனங்களால் ஓ.எம்.ஆர்., சாலையில் நெரிசல்
/
அதிகரிக்கும் கனரக வாகனங்களால் ஓ.எம்.ஆர்., சாலையில் நெரிசல்
அதிகரிக்கும் கனரக வாகனங்களால் ஓ.எம்.ஆர்., சாலையில் நெரிசல்
அதிகரிக்கும் கனரக வாகனங்களால் ஓ.எம்.ஆர்., சாலையில் நெரிசல்
ADDED : ஜூன் 28, 2024 11:03 PM
திருப்போரூர்:திருப்போரூர் ஓ.எம்.ஆர்., சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில், காலவாக்கம் முதல் வெங்கலேரி வரை, 5 கி.மீ., துாரத்திற்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புறவழிச்சாலையில், தற்போது 95 சதவீதம் பணிகள் நிறைவடைந்து, வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால், திருப்போரூர் ஓ.எம்.ஆர்., சாலை பகுதியில், போக்குவரத்து நெரிசல் குறைந்துவருகிறது. எனினும்,பல்வேறு கனரக வாகனங்கள், திருப்போரூர் ஓ.எம்.ஆர்., சாலையை பயன் படுத்தியே செல்கின்றன. இதனால், திருப்போரூர் ரவுண்டானாவில் இருந்து, இள்ளலுார் சாலைசந்திப்பு வரை, போக்கு வரத்து நெரிசல்ஏற்படுகிறது.
குறிப்பாக, சுபமுகூர்த்த நேரங்களில், அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சமீபத்தில், காவல் துறையினர் திருப்போரூர் ரவுண்டானாவில் அறிவிப்பு பலகை வைத்து, கனரக வாகனங்களை புறவழிச்சாலையில் திருப்பி விட்டனர். ஆனால்,மீண்டும் பழையபடியே கனரக வாகனங்கள் ஓ.எம்.ஆர்., சாலையிலேயே செல்வதால், மீண்டும் போக்கு வரத்து நெருக்கடிஉருவாகி வருகிறது.
எனவே, முகூர்த்த நேரங்களில் மட்டுமாவது, கனரக வாகனங்கள் புறவழிச்சாலையில் செல்லும்படி திருப்போரூர் காவல் துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.