ADDED : செப் 12, 2024 01:29 AM
கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி - பொத்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள தைலாவரம் பகுதியில், நேற்று முன்தினம் இரவில், ரயிலில் அடிபட்டு, ஒருவர் இறந்து கிடப்பதாக, தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.
அதன் அடிப்படையில் அங்கு சென்ற தாம்பரம் போலீசார், ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடந்தவரின் உடலை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்தனர்.
அதில், அவர் பெயர் ராமு, 40, என்பதும், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. இவர், தைலாவரம் பகுதியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவில், பணி முடிந்து தண்டவாளம் அருகே நடந்து வந்த போது, தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த சரக்கு ரயில் மோதி உயிரிழந்துள்ளார். இது குறித்து, தாம்பரம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.