/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கார் கவிழ்ந்து விபத்து மேலும் ஒருவர் உயிரிழப்பு
/
கார் கவிழ்ந்து விபத்து மேலும் ஒருவர் உயிரிழப்பு
ADDED : ஜூன் 27, 2024 12:12 AM

சூணாம்பேடு:புதுச்சேரி மாநிலம், நோணாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் போலீஸ் கான்ஸ்டபிள் செல்வம், 35. இவர், நேற்று முன்தினம், தன் நண்பரான சாமுவேல், 28; சூர்யா, 20, மற்றும் பிரீத்தி, 20, ஆகியோருடன் சென்னையில் இருந்து, 'இனோவா' காரில் புதுச்சேரிக்கு சென்றனர்.
அப்போது, அதிவேகமாகவந்ததால், சூணாம்பேடு அடுத்த வெண்ணாங்குப்பட்டு கிராமத்தில், சாலை விரிவாக்கப் பணிக்காக சாலை ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த தடுப்பில் கார் மோதி, சாலையோர பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது.
இதில், காரை ஓட்டிச் சென்ற போலீஸ் கான்ஸ்டபிள் செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாமுவேல், சூர்யா மற்றும் பிரீத்தி ஆகியமூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு, புதுச்சேரிஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தனர். இதில், சாமுவேல் நேற்று முன்தினம்இரவு 11:30 மணிக்கு சிகிச்சை பலனின்றிஉயிரிழந்தார்.