/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திறந்த நிலையில் 'செப்டிக் டேங்க்' அரசு மருத்துவமனை அருகே பீதி
/
திறந்த நிலையில் 'செப்டிக் டேங்க்' அரசு மருத்துவமனை அருகே பீதி
திறந்த நிலையில் 'செப்டிக் டேங்க்' அரசு மருத்துவமனை அருகே பீதி
திறந்த நிலையில் 'செப்டிக் டேங்க்' அரசு மருத்துவமனை அருகே பீதி
ADDED : பிப் 25, 2025 11:44 PM

மதுராந்தகம்,மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனை அருகே, திறந்த நிலையிலுள்ள 'செப்டிக் டேங்க்'கால் உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் 17-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், அரசு பொது மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனையை சித்தாமூர், சூனாம்பேடு, அச்சிறுபாக்கம், மதுராந்தகம், ராமாபுரம், வேடந்தாங்கல் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
நாள்தோறும் புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் என, 1,300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனை மதில் சுவர் அருகே நகராட்சி சார்பில் கட்டண கழிப்பறை கட்டப்பட்டு, செயல்பட்டு வந்தது.
கட்டடம் பழமையானதால், கழிப்பறையை இடித்து அகற்றிவிட்டு, புதிதாக கட்டண கழிப்பறை கட்டுவதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது, பழைய கட்டண கழிப்பறை இடிக்கப்பட்டதால், செப்டிக் டேங்க் மூடி திறந்த நிலையில் உள்ளது.
அதில், சில நாட்களுக்கு முன், ஆட்டுக்குட்டி ஒன்று தவறி விழுந்தது.
அதேபோன்று, மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த ஆண் நபர் ஒருவரும் அதில் தவறி விழுந்தார்.
திறந்த நிலையில், அபாய நிலையில் உள்ள இந்த செப்டிக் டேங்க்கால், கால்நடைகள் மற்றும் மனிதர்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
எனவே, நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, செப்டிக் டேங்க் உள்ள பகுதியில் தடுப்பு வைக்க வேண்டும் எனவும், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

