/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புதிய மேல்நிலை தொட்டி அமைக்க ஒரங்காவலி மக்கள் வேண்டுகோள்
/
புதிய மேல்நிலை தொட்டி அமைக்க ஒரங்காவலி மக்கள் வேண்டுகோள்
புதிய மேல்நிலை தொட்டி அமைக்க ஒரங்காவலி மக்கள் வேண்டுகோள்
புதிய மேல்நிலை தொட்டி அமைக்க ஒரங்காவலி மக்கள் வேண்டுகோள்
ADDED : செப் 09, 2024 11:50 PM

சித்தாமூர் : சித்தாமூர் அருகே காட்டுதேவாத்துார் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரங்காவலி கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
கிராமத்தில் உள்ள குடிநீர் கிணற்றில் இருந்து, மின் மோட்டார் வாயிலாக, 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி, 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. முறையான பராமரிப்பு இல்லாமல், நாளடைவில் அது சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
மேலும், தொட்டியின் உட்புறத்திலும் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்ததால், இரும்புத் துகள்கள் தண்ணீரில் கலப்பதாக, அப்பகுதிவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர். ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, பழைய மேல்நிலை குடிநீர் தொட்டியை அகற்றி, புதிய குடிநீர் தொட்டி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.