ADDED : மே 19, 2024 01:12 AM
தாம்பரம்:தாம்பரம் அடுத்த இரும்புலியூர் மற்றும் பீர்க்கன்காரணை ஏரிகள், மழைக்காலத்தில் நிரம்பி, உபரி நீர் வெளியேறுவதால், அப்பகுதிகளில் குடியிருப்புகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. ஒவ்வொரு மழைக்கும் இப்பிரச்னை ஏற்படுவதால், இதற்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, இரும்புலியூர் ஏரியின் உபரி நீர் கால்வாயில் இருந்து, தாம்பரம் டி.டி.கே., நகர் வழியாக அடையாறு ஆற்றை இணைக்கும் வகையில், 3.8 கி.மீ., துாரத்திற்கு 96.50 கோடி ரூபாய் செலவில் மூடுகால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இப்பணிகளை, செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ், நேற்று மாலை ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைந்து முடிக்க, அவர் உத்தரவிட்டார்.
நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் செல்வகுமார், உதவி செயற்பொறியாளர் மகேந்திர குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

