/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தண்ணீர் பந்தல் திறக்க உத்தரவு
/
மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தண்ணீர் பந்தல் திறக்க உத்தரவு
மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தண்ணீர் பந்தல் திறக்க உத்தரவு
மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தண்ணீர் பந்தல் திறக்க உத்தரவு
ADDED : மே 07, 2024 08:55 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட அளவிலான தீ மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு குழுக்கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நடந்தது.
மாவட்ட வருவாய் சுபாநந்தினி மற்றும் வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, மருத்துவத்துறை, தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர் பகுதிகளில், பயணியர் நிழற்குடை அமைக்க, மறைமலை நகர் நகராட்சி நிர்வாகம், ஊராட்சிகள் உதவி இயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் ஆய்வு செய்து, செங்கல்பட்டு சப் -- கலெக்டர், மதுராந்தகம், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், மின்சார வாரியம், தீயணைப்புத் துறை இணைந்து, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டார். வெயில் தாக்கம் அதிகம் உள்ளதால், மக்கள் அதிகம் கூடும் இடங்களில், தண்ணீர், நீர் மோர் வழங்க வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புக்களில், வெயில் அதிகமான நேரங்களில், துாய்மை பணியாளர்கள் பணி செய்வதை தவிர்க்க வேண்டும்.
பட்டாசு தொழிற்சாலை, பட்டாசு விற்பனை செய்யும் கடைகளை, தீயணைப்புத் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை, அதிகாரிகளுக்கு கலெக்டர் வழங்கினார்.

