/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'அவுட்லுக் ஐகேர் - 2024' தரவரிசை மாமல்லை சிற்ப கல்லூரி சிறப்பிடம்
/
'அவுட்லுக் ஐகேர் - 2024' தரவரிசை மாமல்லை சிற்ப கல்லூரி சிறப்பிடம்
'அவுட்லுக் ஐகேர் - 2024' தரவரிசை மாமல்லை சிற்ப கல்லூரி சிறப்பிடம்
'அவுட்லுக் ஐகேர் - 2024' தரவரிசை மாமல்லை சிற்ப கல்லூரி சிறப்பிடம்
ADDED : ஜூலை 11, 2024 10:17 PM
மாமல்லபுரம்:இந்தியாவில் உள்ள பல்கலைக் கழகங்கள் மற்றும் பலவகை கல்லுாரிகளின் தரநிலை குறித்து, அவுட்லுக் பத்திரிகை மற்றும் ஐகேர் நிறுவனம் ஆய்வு செய்து, தேசிய அளவிலான தரவரிசையை வெளியிட்டுள்ளது.
தற்போது 'அவுட்லுக் ஐகேர் - 2024'ன் தரவரிசை அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் இசை கல்லுாரிகளில், தஞ்சாவூர் மாவட்டம் அரசு இசை கல்லுாரி, ஆசிரியர் மற்றும் மாணவர் எண்ணிக்கை, மாணவர்களின் சாதனைகள், உட்கட்டமைப்பு வசதிகள், தொழில் வாய்ப்புகள் அடிப்படையில், 1,000க்கு, 859.26 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளது.
சென்னை அரசு இசை கல்லுாரி, 806.28 புள்ளிகள் பெற்று, 12ம் இடம் பெற்றுள்ளது. பாரம்பரிய மரபு கட்டடம், சிற்பம், ஓவிய ஆகிய கலைகள் சார்ந்த பிரிவில், மாமல்லபுரம் அரசு கட்டடக்கலை, சிற்பக்கலை கல்லுாரி தங்க தர சிறப்பிடம் பெற்றுள்ளது.
தமிழக கலை, பண்பாடு துறை, தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக் கழகம் ஆகியவற்றின்கீழ், இக்கல்லுாரிகள் இயங்குவது குறிப்பிடத்தக்கது.