/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காலி மதுபாட்டில்களோடு கவிழந்த சரக்கு லாரி
/
காலி மதுபாட்டில்களோடு கவிழந்த சரக்கு லாரி
ADDED : பிப் 22, 2025 11:56 PM

புதுப்பட்டினம்,
புதுச்சேரியிலிருந்து, நேற்று முன்தினம் இரவு, அட்டைப் பெட்டிகளில் காலி குவார்ட்டர் மது பாட்டில்கள் ஏற்றிய லாரி, சென்னைக்கு சென்று கொண்டிருந்தது. கல்பாக்கம் அடுத்த, வாயலுார் பகுதியில் கடந்தபோது, எதிரில் வந்த வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கியது.
அப்போது கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது. இதில், சில நுாறு காலி மது பாட்டில்கள் உடைந்தன. லாரி ஓட்டுநர் பரந்தாமன், 52, லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
வேறு லாரி வரவழைக்கப்பட்டு, எஞ்சிய பாட்டில்கள் ஏற்றப்பட்டு, சென்னைக்கு அனுப்பப்பட்டது. நேற்று மாலை, கிரேன் வாயிலாக, லாரி மீட்கப்பட்டது. சதுரங்கப்பட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.

