/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசை கண்டித்து துண்டு பிரசுரம்
/
அரசை கண்டித்து துண்டு பிரசுரம்
ADDED : பிப் 22, 2025 11:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம், மதுராந்தகத்தில் மாவட்ட ஜெ., பேரவை சார்பில் அ.தி.மு.க., ஆட்சியின் 10 ஆண்டு சாதனையை பொது மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில், துண்டு பிரசுரங்களை வழங்கி, நேற்று, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நான்கு ஆண்டு கால திமுக ஆட்சியின் அவல நிலைகளையும், சட்டம் - ஒழுங்குப் பிரச்னைகளையும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.
அனைத்து வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியின் சாதனையை எடுத்துரைத்தனர்.
இதில், மாவட்ட செயலர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், மதுராந்தகம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., மரகதம், நகர செயலாளர் பூக்கடை சரவணன் தலைமையில் அ.தி.மு.க.,வினர் துண்டு பிரசுரம் வழங்கினர்.