/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சித்தாமூர் ஒன்றிய தலைவர் அதிகார துஷ்பிரயோகம் ஊராட்சி தலைவர்கள் புகார்
/
சித்தாமூர் ஒன்றிய தலைவர் அதிகார துஷ்பிரயோகம் ஊராட்சி தலைவர்கள் புகார்
சித்தாமூர் ஒன்றிய தலைவர் அதிகார துஷ்பிரயோகம் ஊராட்சி தலைவர்கள் புகார்
சித்தாமூர் ஒன்றிய தலைவர் அதிகார துஷ்பிரயோகம் ஊராட்சி தலைவர்கள் புகார்
ADDED : ஏப் 02, 2024 01:16 AM

சித்தாமூர், சித்தாமூர் ஒன்றியத்தில், 43 ஊராட்சிகள் உள்ளன. 17 ஆண் ஊராட்சி தலைவர்கள், 26 பெண் ஊராட்சி தலைவர்கள் உள்ளனர். தி.மு.க., ஒன்றிய செயலர் ஏழுமலை, சித்தாமூர் ஒன்றியத் தலைவராக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், சித்தாமூர் ஒன்றியத்தில் அடங்கிய ஊராட்சிகளின் பெண் தலைவர்கள் கூட்டமைப்பு சார்பாக, 'அதிகார துஷ்பிரயோகம் செய்யும் சித்தாமூர் ஒன்றியத் தலைவர் ஏழுமலை மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மனு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல்ஜீவன் திட்டம், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம், பி.எம்.எ.ஜி.ஒய்., உள்ளிட்ட திட்டப்பணிகள் குறித்து, ஊராட்சி தலைவர்களுக்கு எந்தவித தகவலும் தெரிவிப்பதில்லை.
சர்வாதிகாரி போல செயல்படும் அவர், தன் மகன் விஜயகுமார் உள்ளிட்ட தனக்கு வேண்டப்பட்ட ஒப்பந்ததாரருக்கு மட்டுமே தகவல் அளித்து, டெண்டர் விடப்படுகிறது.
ஆகையால், 2024 - 25 அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஈசூர், பருக்கல், புலியணி, நுகும்பல் போன்ற ஒன்பது ஊராட்சிகளில் வழங்கப்பட்டுள்ள நிர்வாக அனுமதி மற்றும் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள 15 மேல்நிலை குடிநீர் தொட்டி அமைப்பதற்கான அனுமதி ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும்.
அதற்கு பதிலாக, புதிய ஒப்பந்தங்கள் அமைக்கவும், ஊராட்சிகளுக்கு ஒதுக்கும் திட்ட ஒப்பந்தப் பணிகள் தொடர்பாக தலையிடுவதை தடுக்க, ஒன்றியத் தலைவர் ஏழுமலை மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மனுவில், 21 பெண் ஊராட்சி தலைவர்கள், ஒன்பது ஆண் ஊராட்சி தலைவர்கள் உட்பட, 30 ஊராட்சி தலைவர்களின் கையெழுத்திட்டு அனுப்பப்பட்டுள்ளது.

