/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வெளிநாடுகளுக்கு 'பார்சல்' அஞ்சலில் அனுப்பலாம்
/
வெளிநாடுகளுக்கு 'பார்சல்' அஞ்சலில் அனுப்பலாம்
ADDED : பிப் 28, 2025 11:48 PM
செங்கல்பட்டு செங்கல்பட்டு தபால் நிலையத்திலிருந்து, வெளிநாடுகளுக்கு குறைந்த கட்டணத்தில் 'பார்சல்' அனுப்பலாம்.
இதுறித்து, செங்கல்பட்டு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சண்முகசாமி வெளியிட்ட அறிக்கை:
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டத்தை, அஞ்சல் துறை அறிமுகப்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு தலைமை அஞ்சலகத்தில், இதற்கான பிரத்யேக வசதி செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, 'பார்சல்' ஏற்றுமதியை குறைந்த கட்டணத்தில், வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியும்.
'டிஜிட்டல்' சுங்க அனுமதி, 'புக்கிங்' முதல் 'டெலிவரி' வரை கண்காணிப்பு, அனுப்பப்படும் பொருட்களுக்கு வரம்பு இல்லை.
புதிய ஏற்றுமதியாளர்கள் எம்.எஸ்.எம்.இ.,க்கள் மற்றும் மின் வணிக ஏற்றுமதியாளர்களுக்கு, இது ஒரு அற்புதமான வாய்ப்பு. மேலும் விபரங்களுக்கு, அலுவலக பிரிவு அலுவலர் பிரதீப் மற்றும் 98420 61500 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.