/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிமென்ட் கல் சாலை அமைக்க தொன்னாடு மக்கள் எதிர்ப்பு
/
சிமென்ட் கல் சாலை அமைக்க தொன்னாடு மக்கள் எதிர்ப்பு
சிமென்ட் கல் சாலை அமைக்க தொன்னாடு மக்கள் எதிர்ப்பு
சிமென்ட் கல் சாலை அமைக்க தொன்னாடு மக்கள் எதிர்ப்பு
ADDED : ஆக 04, 2024 12:38 AM

சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த தொன்னாடு ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு, குடியிருப்பு பகுதியில் இருந்து, மயானத்திற்கு செல்லும் 150 மீட்டர் நீளமுடைய பாதை உள்ளது.
இந்த பாதையை அப்பகுதி மக்கள் தங்கள் வயல்வெளிக்கு சென்றுவர பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது.
நாளடைவில் சாலை சேதமடைந்ததால், ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து, 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சிறுபாலம் மற்றும் 45 மீட்டர் நீளத்திற்கு மட்டும் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணிதுவக்கப்பட்டு உள்ளது.
வயல்வெளிக்கு செல்லும் பாதையில் சிமென்ட் கல் சாலை அமைத்தால், டிராக்டர் மற்றும் அறுவடை இயந்திரம் வயல்வெளிக்கு வந்து செல்லும் போது, சிமென்ட் கல் உடைந்து சாலை விரைவில் சேதமடைய வாய்ப்பு உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணியை நிறுத்திவிட்டு, அந்த நிதியில் மலைப்பகுதியில் இருந்து ஏரிக்கு மழைநீர் வரும் பாதையில் சிறுபாலம் அமைக்க வேண்டும்.
மேலும், மயான பாதை முழுதும் சிமென்ட் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.