/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உவர்ப்பு நீரால் மக்கள் அவதி; சுத்திகரிப்பு நிலையம் அமையுமா?
/
உவர்ப்பு நீரால் மக்கள் அவதி; சுத்திகரிப்பு நிலையம் அமையுமா?
உவர்ப்பு நீரால் மக்கள் அவதி; சுத்திகரிப்பு நிலையம் அமையுமா?
உவர்ப்பு நீரால் மக்கள் அவதி; சுத்திகரிப்பு நிலையம் அமையுமா?
ADDED : ஆக 19, 2024 12:18 AM
செய்யூர் : பவுஞ்சூர் அடுத்த நெடுமரம் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தில் உள்ள குடிநீர் கிணறுகளில் இருந்து மின் மோட்டார் வாயிலாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, குழாய்கள் மூலமாக கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த தண்ணீரில் சுண்ணாம்பு தன்மை அதிகளவில் இருப்பதால், இப்பகுதியில் 50க்கும் மேற்பட்டோர் சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 20க்கும் மேற்பட்டோர் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நெடுமரம் ஊராட்சியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு அதிகாரிகளிடம் மனு அளித்தும், தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், இப்பகுதி மக்களின் நலன் கருதி, நெடுமரம் ஊராட்சியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

