/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
/
செங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
செங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
செங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 17, 2024 12:57 AM

செங்கல்பட்டு,தமிழக அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகள் சங்கம் சார்பில், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்கத்தின் மாநில தலைவர் வில்சன் முன்னி லையில், மாநில குழு உறுப்பினர் தாட்சாயிணி தலைமையில், ஆர்ப்பாட்டத்தில் 300க்கும்மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.
இந்த நிதியாண்டில் நுாறு நாள் வேலை திட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் உள்ள ரேஷன் அட்டை களுக்கு, 35 கிலோ அரசி வழங்க வேண்டும்என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்களைஎழுப்பினர்.
தொடர்ந்து, கலெக்டர்அலுவலக நுழைவு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தமாற்றுத்திறனாளிகளிடம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் அறிவுடைநம்பி கோரிக்கை மனுக்களை பெற்று, பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.