/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'மக்களுடன் முதல்வர்' முகாம் திருக்கழுக்குன்றத்தில் துவக்கம்
/
'மக்களுடன் முதல்வர்' முகாம் திருக்கழுக்குன்றத்தில் துவக்கம்
'மக்களுடன் முதல்வர்' முகாம் திருக்கழுக்குன்றத்தில் துவக்கம்
'மக்களுடன் முதல்வர்' முகாம் திருக்கழுக்குன்றத்தில் துவக்கம்
ADDED : ஜூலை 16, 2024 05:00 AM
திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம் வட்டாரத்தில், மக்களுடன் முதல்வர் முகாம், நென்மேலியில் இன்று துவங்குகிறது.
வெவ்வேறு பகுதிகளில், எட்டு நாட்கள் நடக்கும் இம்முகாம், ஆக., 6ம் தேதி புதுப்பட்டினத்தில் நிறைவடைகிறது.
கிராம ஊராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடம், அனைத்து துறைகள் சார்ந்த கோரிக்கை மனுக்களை, மக்களுடன் முதல்வர் முகாம் நடத்தி பெற, ஊரக வளர்ச்சித் துறை ஏற்பாடு செய்துள்ளது.
இம்முகாமில், வருவாய், ஊரக வளர்ச்சி, கூட்டுறவு, வீட்டு வசதி, மாற்றுத்திறனாளிகள் நலம், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலம், வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, மின் வாரியம் உள்ளிட்ட துறைகள் சார்ந்த கோரிக்கை மனுக்கள், காலை 10:00 மணி முதல், மாலை 3:00 மணி வரை பெறப்படும்.