/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குடியிருப்புகள் நடுவே டாஸ்மாக் மறைமலை நகரில் மக்கள் எதிர்ப்பு
/
குடியிருப்புகள் நடுவே டாஸ்மாக் மறைமலை நகரில் மக்கள் எதிர்ப்பு
குடியிருப்புகள் நடுவே டாஸ்மாக் மறைமலை நகரில் மக்கள் எதிர்ப்பு
குடியிருப்புகள் நடுவே டாஸ்மாக் மறைமலை நகரில் மக்கள் எதிர்ப்பு
ADDED : செப் 17, 2024 11:31 PM

மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சி, என்.ஹெச் - 2 பகுதியில், அண்ணா சாலையில் இரண்டு டாஸ்மாக் கடையும், இதே சாலையில் கூடலுார் பகுதியில் ஒரு டாஸ்மாக் கடையும் என, மொத்தம் மூன்று டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், டாஸ்மாக் நிர்வாகம் சார்பில், மறைமலை நகர் நகராட்சி, 13வது வார்டு பாவேந்தர் சாலையில், புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு உள்ளது.
இதற்கு, பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து, மறைமலை நகர் பொது மக்கள் கூறியதாவது:
மறைமலை நகரில் ஏற்கனவே உள்ள மூன்று டாஸ்மாக் கடைகளில் மது வாங்குவோர், கடையின் எதிரே உள்ள காலி இடங்களில் அமர்ந்து மது அருந்தி வருகின்றனர். இதன் காரணமாக, அப்பகுதியில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பாவேந்தர் சாலையில், 1,000த்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள், சர்ச், தனியார் துவக்கப் பள்ளி உள்ள இடத்தில், புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு உள்ளது.
சில நாட்களாக, டாஸ்மாக் கடை பெயர் பலகை ஏதுமின்றி, மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே, புதிதாக திறக்கப்பட்ட இந்த டாஸ்மாக் கடையை, இந்த பகுதியில் இருந்து அகற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்நிலையில், புதிய டாஸ்மாக் கடை திறந்து உள்ளதை கண்டித்து, வி.சி., சார்பில், மறைமலை நகரின் முக்கிய பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.
அ.தி.மு.க., சார்பில், இன்று காலை 11:55 மணிக்கு போராட்டம் நடத்த உள்ளதாக, அக்கட்சியின் நிர்வாகிகள் அறிவித்து உள்ளனர்.