/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் 535 இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி: பாதுகாப்பு பணியில் 950 போலீசார்

ADDED : செப் 07, 2024 07:36 AM
செங்கல்பட்டு : செங்கல்பட்டு காவல் மாவட்டத்தில், 535 இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, இன்று 950 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
கண்காணிப்பு
ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா, ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழா, இன்று கொண்டாடப்படுகிறது.
காவல் மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், மாமல்லபுரம் காவல் துணை கண்காணிப்பாளர்கள் அலுவலக கட்டுப்பாட்டில், 20 காவல் நிலையங்கள் உள்ளன.
இந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், 535 விநாயகர் சிலைகள் வைக்க, மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.
சிலைகள் வைக்கும் பகுதியில், தன்னார்வலர்கள் இரண்டு பேர், 24 மணி நேரமும், சுழற்சி முறையில் பணியில் ஈடுபட வேண்டும்.
சிலை ஊர்வலத்தின் போது, பட்டாசுகள் வெடிக்க அனுமதியில்லை.
சிலை ஊர்வலத்திற்கு மினி லாரி, டிராக்டர் போன்ற வாகனங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். மாமல்லபுரம், வடபட்டினம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில், சிலைகள் கரைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள், சிலை அமைப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு
இதைத் தொடர்ந்து, எஸ்.பி., சாய் பிரணீத் தலைமையில், கூடுதல் கண்காணிப்பாளர்கள், ஆறு டி.எஸ்.பி., 20 இன்ஸ்பெக்டர்கள் உட்பட, 950 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர் என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.