/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெரும்பேர்கண்டிகை மரகத பூஞ்சோலை மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்பு
/
பெரும்பேர்கண்டிகை மரகத பூஞ்சோலை மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்பு
பெரும்பேர்கண்டிகை மரகத பூஞ்சோலை மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்பு
பெரும்பேர்கண்டிகை மரகத பூஞ்சோலை மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்பு
ADDED : ஆக 14, 2024 10:52 PM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியம், பெரும்பேர்கண்டிகை குளக்கரை அருகே, 2.47 ஏக்கர் நிலத்தில், 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மரகத பூஞ்சோலை அமைக்கப்பட்டுள்ளது.
அங்கு, கனி தரும் மரங்கள், நிழல் தரும் மரங்கள் என, 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு வளர்த்து, வனத்துறை சார்பில் பூங்கா அமைக்கப்படுகிறது. மா, பலா, வேம்பு, புங்கை, வேங்கை மற்றும் காட்டு வகை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
நேற்று, மரகத பூஞ்சோலையை மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கும் நிகழ்வை, தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக துவங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட கவுன்சிலர் வசந்தா, அச்சிறுபாக்கம் ஒன்றிய குழு தலைவர் கண்ணன், ஊராட்சி தலைவர் சாவித்திரி, மக்கள் பிரதிநிதிகள், வனத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள், பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.