/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சூணாம்பேடு ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம்
/
சூணாம்பேடு ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம்
ADDED : பிப் 26, 2025 11:45 PM
சூணாம்பேடு, சித்தாமூர் அருகே சூணாம்பேடு ஊராட்சியில் மனு நீதி நாள் முகாம், தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நடந்த முகாமில், பல்வேறு துறையைச் சார்ந்த மாவட்ட அளவிலான அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதில், சாலை விபத்து நிவாரணம், இலவச வீட்டு மனை பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை என, மொத்தம் 42 பயனாளிகளுக்கு 17.84 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
வேளாண்மை, சுகாதாரம், கூட்டுறவு, தோட்டக்கலைத் துறை, ஊரக வளர்ச்சி, கல்வித்துறை உட்பட பல்வேறு துறை சார்பாக முகாம்கள் அமைக்கப்பட்டன.
இதில், அரசு வாயிலாக வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டது.
கிராம மக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுவாக எழுதி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அளித்தனர்.

