/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சீமான் பேரணிக்கு அனுமதி மறுப்பு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
/
சீமான் பேரணிக்கு அனுமதி மறுப்பு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
சீமான் பேரணிக்கு அனுமதி மறுப்பு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
சீமான் பேரணிக்கு அனுமதி மறுப்பு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
ADDED : மார் 13, 2025 10:32 PM
திருப்போரூர்:திருப்போரூர் பகுதியில் பஞ்சமி நிலம் மீட்பு, சாதி வாரி கணக்கெடுப்பு என்ற தலைப்பில், வரும் 16ம் தேதி அமைதிப் பேரணி நடத்த அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் தடாரஹீம், புரட்சித் தமிழர் பறையர் பேரவை தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி, சிறுபான்மை மக்கள் கட்சி தலைவர் சாம் ஏசுதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது.
திருப்போரூர் இள்ளலுார் சாலை சந்திப்பில் இருந்து ஓ.எம்.ஆர்., சாலையில், திருப்போரூர் ரவுண்டானா வரை பேரணி சென்று, அங்கு பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கு அனுமதி கோரி, திருப்போரூர் போலீசில் கடந்த 5ம் தேதி, அக்கட்சி மாவட்ட செயலர் சசிகுமார் மனு அளித்துள்ளார்.
இந்த பேரணி, பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்து, திருப்போரூர் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், கடந்த 7ம் தேதி உத்தரவிட்டார்.
உத்தரவில், திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மாசி பிரம்மோற்சவம், வரும் 16ம் தேதி திருமண முகூர்த்த நாள் உள்ளிட்டவற்றால், திருப்போரூரில் நெரிசல் ஏற்படும். இதனால் பேரணி, பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, கடந்த 10ம் தேதி, நாம் தமிழர் கட்சி சார்பில், பேரணிக்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
நேற்று இதை விசாரித்த நீதிபதி இளந்திரையன், தீர்ப்பை இன்று ஒத்தி வைத்தார். இதற்கான தீர்ப்பு, இன்று தெரியவரும்.