/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
லஞ்ச அதிகாரிகள் நடவடிக்கை கோரி மனு சிங்கிள் காலம்
/
லஞ்ச அதிகாரிகள் நடவடிக்கை கோரி மனு சிங்கிள் காலம்
ADDED : பிப் 27, 2025 09:06 PM
திருப்போரூர்,:வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில், மண்டல வாரியான 2025- -26ம் நிதியாண்டின் வேளாண்மைக்கான தனி நிதி நிலை அறிக்கை கருத்துக்கேட்பு கூட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் நேற்று நடந்தது.
இதில், செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் சங்க துணைத் தலைவர் கெஜராஜன் பங்கேற்று, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.
மனுவில் கூறியிருப்பதாவது:
அரசு நெல்கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் கையூட்டு பெறும் அலுவலர்கள், தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாதத்திற்கு ஒரு ஏரி வீதம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறிய, பெரிய ஏரிகள், தாங்கல்கள் போன்றவற்றை துார் வாரி ஆழப்படுத்த வேண்டும்.
அனைத்து நீர்வரத்து கால்வாய்களையும் துார் வாரி சீரமைப்பதோடு, ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும். தேவையான விதை, உரம், பூச்சி மருந்துகள் போன்றவற்றை உரிய பருவ காலத்தில் தங்கு தடையின்றி கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

