/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆரம்ப சுகாதார நிலையத்தில் 'ஸ்கேன்' வசதி ஏற்படுத்த மனு
/
ஆரம்ப சுகாதார நிலையத்தில் 'ஸ்கேன்' வசதி ஏற்படுத்த மனு
ஆரம்ப சுகாதார நிலையத்தில் 'ஸ்கேன்' வசதி ஏற்படுத்த மனு
ஆரம்ப சுகாதார நிலையத்தில் 'ஸ்கேன்' வசதி ஏற்படுத்த மனு
ADDED : ஆக 19, 2024 12:13 AM
திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த செம்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 'ஸ்கேன்' வசதியை ஏற்படுத்த கோரி செம்பாக்கம் ஊராட்சி தலைவர் சரவணன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியனிடம் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
செம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுப்பாட்டில் செம்பாக்கம், கொட்டமேடு, வெண்பேடு, இள்ளலூர், கண்ணகப்பட்டு, தண்டலம், பையனூர், தையூர், நெம்மேலி, பட்டிபுலம் உள்ளிட்ட 10 ஊராட்சிகள் மற்றும் அருகே உள்ள கிராமங்களில் துணை சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
அதேபோல், செம்பாக்கம் ஊராட்சியில் மட்டும் ஆண்டுதோறும், 106 கர்ப்பிணியர் பதிவு செய்யப்படுவதாக புள்ளி விபரம் உள்ளது.
எனவே, கர்ப்பிணியரின் நலன் கருதி, செம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 'ஸ்கேன்' எடுக்கும் வசதி ஏற்படுத்த வேண்டும்.
மேலும், செம்பாக்கம் ஊராட்சியில் 6,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். எனவே, ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

