/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சோழிங்கநல்லுார் அரசு ஊழியர்களை தேர்தல் பணிக்கு அனுப்பக்கோரி மனு
/
சோழிங்கநல்லுார் அரசு ஊழியர்களை தேர்தல் பணிக்கு அனுப்பக்கோரி மனு
சோழிங்கநல்லுார் அரசு ஊழியர்களை தேர்தல் பணிக்கு அனுப்பக்கோரி மனு
சோழிங்கநல்லுார் அரசு ஊழியர்களை தேர்தல் பணிக்கு அனுப்பக்கோரி மனு
ADDED : மார் 21, 2024 08:53 AM
செங்கல்பட்டு:சோழிங்கநல்லுார் சட்டசபை தொகுதியில் உள்ள அரசு ஊழியர்களை, தேர்தல் பணிக்கு அனுப்பி வைக்கக் கோரி, சென்னைமாநகராட்சிக்கு செங்கல்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் மனுஅனுப்பியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், சோழிங்கநல்லுார், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் - தனி, மதுராந்தகம் - தனி ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன.
சென்னை மாவட்டத்தில், சோழிங்கநல்லுார் சட்டசபை தொகுதி, சென்னை மாநகராட்சி நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், லோக்சபா தேர்தல் பணியில், மாவட்டத்தில், 13,500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.
இதில், சோழிங்கநல்லுார் சட்டசபை தொகுதியில் பணிபுரியும் 3,000த்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள், சென்னை மாநகராட்சி நிர்வாகம், தேர்தல்பணியில் ஈடுபடுத்தஉள்ளது.
சோழிங்கநல்லுாரில் பணிபுரியும் அரசுஊழியர்களை,செங்கல்பட்டு மாவட்டதேர்தல் பணிக்கு அனுப்பி வைக்க, சென்னை மாநகராட்சி மற்றும் தமிழகஅரசுக்கு, செங்கல்பட்டு மாவட்ட தேர்தல் பிரிவில் இருந்து மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த மனு மீது நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதற்கிடையில், லோக்சபா தேர்தல் தொடர்பாக, ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு, வரும் 24ம் தேதி பயிற்சி அளிக்க உள்ளனர்.
இதனால், சோழிங்கநல்லுார் தொதியில் உள்ள அரசு ஊழியர்களை, மாவட்டதேர்தலில் பணிபுரிய, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான அருண்ராஜ்,மனு அனுப்பிஉள்ளார்.

