/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூடுவாஞ்சேரியில் நிலவி வரும் குடிநீர் பிரச்னையை தீர்க்க மனு
/
கூடுவாஞ்சேரியில் நிலவி வரும் குடிநீர் பிரச்னையை தீர்க்க மனு
கூடுவாஞ்சேரியில் நிலவி வரும் குடிநீர் பிரச்னையை தீர்க்க மனு
கூடுவாஞ்சேரியில் நிலவி வரும் குடிநீர் பிரச்னையை தீர்க்க மனு
ADDED : ஏப் 28, 2024 01:49 AM
கூடுவாஞ்சேரி:நந்திவரம் - - கூடுவாஞ்சேரி நகராட்சி முதலாவது வார்டு தி.மு.க., கவுன்சிலராக பதவி வகிப்பவர் நாகேஸ்வரன், 67. இவர், நேற்று நகராட்சி கமிஷனருக்கு ஒரு புகார் மனு வழங்கினார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, முதல் வார்டுக்கு உட்பட்ட அருள் நகர் சுற்றுவட்டார பகுதியில், தற்போது நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. இதனால், இப்பகுதி வாசிகள் குடிநீருக்காக சிரமம் அடைந்து வருகின்றனர்.
எனவே, அத்தியாவசிய தேவைகளுக்காகவும், குடிநீருக்காகவும் நகராட்சி சார்பில், அருள் நகரில் உள்ள ஐஸ்வர்யா காம்ப்ளக்ஸ், மாணிக்கவாசகர் தெரு, பிருந்தாவனம் தெரு, ஜெகதீஷ் நகர் ஆகிய பகுதிகளில் குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும்.
மேலும், இந்த தொட்டி வாயிலாக, இப்பகுதிவாசிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்து இருந்தார்.
இந்த புகார் மனுவை பெற்றுக் கொண்ட நகராட்சி கமிஷனர் தாமோதரன், 'குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும்' எனக் கூறினார்.

