/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கழுத்தறுபட்ட தொழிலாளி உடல் மீட்பு
/
கழுத்தறுபட்ட தொழிலாளி உடல் மீட்பு
ADDED : ஏப் 08, 2024 11:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, மாம்பாக்கத்தில், மர சோபா, டைனிங் டேபிள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது.
இந்த நிலையில், அறை ஒன்றில் தங்கியிருந்த, கேரள மாநிலம், கொந்தங்கரை கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷாம்குமார், 33, நேற்று, அதிகாலை 5:00 மணி அளவில், சமையல் அறையில் கழுத்தில் ஆழமான வெட்டு காயத்துடன் இறந்து கிடந்தார்.
இதை கண்ட, சஜீப், 30, கூச்சலிட்டார். தகவ லறிந்து வந்த, ஸ்ரீபெரும்புதுார் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துவிசாரித்தனர்.

