/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குத்தம்பாக்கத்தில் இருந்து ஜூனில் 100 பஸ்கள் இயக்க திட்டம்
/
குத்தம்பாக்கத்தில் இருந்து ஜூனில் 100 பஸ்கள் இயக்க திட்டம்
குத்தம்பாக்கத்தில் இருந்து ஜூனில் 100 பஸ்கள் இயக்க திட்டம்
குத்தம்பாக்கத்தில் இருந்து ஜூனில் 100 பஸ்கள் இயக்க திட்டம்
ADDED : மார் 08, 2025 11:36 PM
சென்னை, சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், திருமழிசை அடுத்த குத்தம்பாக்கத்தில், 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புது பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. 90 சதவீத பணிகள் முடிந்துள்ளதால், இந்த பேருந்து நிலையம் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
இங்கிருந்து வேலுார், தர்மபுரி, சேலம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான வெளியூர் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இது குறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் ஏற்படும் நெரிசலை குறைக்க, பல்வேறு இடங்களில் பேருந்துகள் பிரித்து இயக்கப்பட்டு வருகின்றன.
கோயம்பேடு, மாதவரம், கிளாம்பாக்கத்தை தொடர்ந்து, குத்தம்பாக்கத்தில் புது பேருந்து நிலையம் கட்டும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.
இதேபோல், இங்கிருந்து சென்னையின் மற்ற இடங்களை இணைக்கும் வகையில், 100 மாநகர பேருந்துகளை இயக்க இறுதி செய்து, அதற்கான வழித்தட பட்டியலையும் தயாராக வைத்துள்ளோம். சென்னை மாநகரத்தின் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில், வழித்தடங்களை தயார் செய்துள்ளோம்.
கோயம்பேடு, மாதவரம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்கள் மற்றும் தி.நகர், பிராட்வே, திருவொற்றியூர், எண்ணுார், தாம்பரம், கூடுவாஞ்சேரி, அடையாறு, அண்ணாசதுக்கம், கிண்டி, கோவளம் உள்ளிட்ட வழித்தடங்களில், வரும் ஜூன் முதல் இயக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.