/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு மாவட்டத்தில் 30 கிணறுகள் அமைக்க திட்டம்
/
செங்கல்பட்டு மாவட்டத்தில் 30 கிணறுகள் அமைக்க திட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் 30 கிணறுகள் அமைக்க திட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் 30 கிணறுகள் அமைக்க திட்டம்
ADDED : மார் 08, 2025 11:40 PM
செய்யூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்கள் உள்ளன.
மாவட்டத்தில், விவசாய நிலங்களில் ஏரி, ஆறு, குளம், தாங்கல், கிணறு, ஆழ்துளைக்கிணறு போன்ற நீர் ஆதாரங்கள் வாயிலாக நெல், உளுந்து, மணிலா உள்ளிட்ட பயிர்களை, விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
இதில் மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகாக்களில், முழுமையாக விவசாயம் சாகுபடி செய்யப்படுகிறது.
நீர்ப்பாசன வசதி இல்லாமல் தரிசு நிலமாக மாறும் நிலையில் உள்ள நிலங்களில் விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக, 2024 - 25ம் ஆண்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் சித்தாமூர் ஒன்றியத்தில் 15 கிணறுகள், லத்துார் ஒன்றியத்தில் 5, மதுராந்தகம் ஒன்றியத்தில் 8 மற்றும் திருப்போரூர் ஒன்றியத்தில் 2 என, தலா 10 லட்சத்தில் 30 தனிநபர் கிணறுகள் அமைக்க, நிர்வாக அனுமதி வழங்கி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
விரைவில் கிணறு அமைக்கும் பணி துவக்கப்பட உள்ளதாக, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.