/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் மரக்கன்றுகள் நடவு
/
கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் மரக்கன்றுகள் நடவு
ADDED : மே 31, 2024 02:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடுவாஞ்சேரி:வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில், பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் காலியாக உள்ள இடத்திலும், பேருந்து முனைய வளாகத்திலும், தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், 220 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
இதில், புங்கன், வேம்பு, நெல்லி, அரச மரம் உள்ளிட்டவை அடங்கும் என, தனியார் தொண்டு நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
இதில், சென்னை பெருநகர வளர்ச்சிக் கழக அதிகாரிகள், தொண்டு நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.