/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு
/
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு
ADDED : பிப் 22, 2025 11:44 PM

திருப்போரூர்,திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகம், கந்தசுவாமி கோவில் நிர்வாகம், படூர் ஹிந்துஸ்தான் பல்கலை நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் இணைந்து திருப்போரூரில் நேற்று பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
பொதுமக்கள், வியாபாரிகளை சந்தித்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் மீண்டும் மஞ்சள் திட்டம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி எடுத்தனர்.
அதேபோல், கோவில் மாடவீதிகள் முழுதிலும் குப்பை கழிவுகளை அப்புறப்படுத்தி துாய்மை பணிகளை மேற்கொண்டனர். இதில், பேரூராட்சி, கோவில் ஊழியர்கள், வார்டு கவுன்சிலர்கள், கல்லுாரி மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

