/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள்; மதுராந்தகத்தில் சுகாதார சீர்கேடு
/
கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள்; மதுராந்தகத்தில் சுகாதார சீர்கேடு
கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள்; மதுராந்தகத்தில் சுகாதார சீர்கேடு
கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள்; மதுராந்தகத்தில் சுகாதார சீர்கேடு
ADDED : ஜூலை 31, 2024 11:43 PM

மதுராந்தகம் : மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட பார்த்தசாரதிதெருவில், கழிவுநீர் கால்வாயில் நிறைந்துள்ள பிளாஸ்டிக் குப்பைக் கழிவுகளை அகற்ற வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுராந்தகம் ஏரிக் கரையில் இருந்து, மாம்பாக்கம் ரயில்வே பாலம் வரை உள்ள இந்த கழிவுநீர் கால்வாய் பராமரிப்பின்றிஉள்ளது.
இக்கால்வாய் அமைந்துள்ள பகுதியில், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலம் உள்ளது.
இப்பகுதியில் மட்டும், சிமென்ட் கலவையால் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால், மண்சரிவு ஏற்பட்டு, கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது.
இதனால், அப்பகுதியில் அதிக அளவில்பன்றிகள் உலா வருவதோடு, அவை பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை கிளறி விடுவதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அதுமட்டுமின்றி அப்பகுதியில் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.
எனவே, கால்வாயில் அடைத்துள்ள பிளாஸ்டிக் குப்பைக் கழிவுகளை அகற்றி, நிரந்தர தீர்வாக சிமென்ட் கான்கிரீட் கால்வாய் அமைக்க, நகராட்சி நிர்வாகத்தினர் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.