/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பூதத்தாழ்வார் ஸ்தலத்தில் உழவாரப்பணி
/
பூதத்தாழ்வார் ஸ்தலத்தில் உழவாரப்பணி
ADDED : ஏப் 09, 2024 11:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம், ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ், மாமல்லபுரத்தில் ஸ்தலசயன பெருமாள் கோவில் உள்ளது. 12 ஆழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வார் அவதரித்த நந்தவன வளாகம், கோவிலின் அருகே உள்ளது. இந்த வளாகத்தில், தனியாரால் கற்குவியல் மற்றும் குப்பை குவிக்கப்பட்டு இருந்தன.
இதையடுத்து, கோவில் பிரம்மோற்சவம் நடக்கவுள்ள நிலையில், சென்னை, மயிலாப்பூர், கிஞ்சித்காரம் அறக்கட்டளை சார்பில், மாமல்லபுரம் முரளி தலைமையில், 20 பேர் கொண்ட குழு, நேற்று கற்குவியல் மற்றும் குப்பைக் கழிவுகளை அகற்றி துாய்மைப் படுத்தினர்.

