/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஓரின சேர்க்கைக்கு அழைத்து நகை பறித்த போலீஸ் கைது
/
ஓரின சேர்க்கைக்கு அழைத்து நகை பறித்த போலீஸ் கைது
ADDED : மார் 28, 2024 12:17 AM
சென்னை:ஆவடி அடுத்த திருமுல்லைவாயிலில் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து நகை பறித்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் அப்துல் ரஹ்மான், 25. தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இவர், நேற்று முன்தினம் ஓரின சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் செயலியை பயன்படுத்தி, கொரட்டூரைச் சேர்ந்த கவியரசு, 24 என்பவரை ஓரின சேர்க்கையில் ஈடுபட அழைத்துள்ளார். அதன்படி வந்த கவியரசுவிடம், அப்துல் ரஹ்மான், அவரது தம்பி மற்றும் நண்பர்கள் மூவரும் கஞ்சா போதையில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். பின், கவியரசை தாக்கி, அவர் அணிந்திருந்த 3.5 சவரன் நகை மற்றும் 'ஜிபே' செயலி வாயிலாக 25,000 பணம் பறித்து, அடித்து துரத்தி உள்ளனர்.
கவியரசு புகாரின் படி விசாரித்த திருமுல்லைவாயில் போலீசார், காவலர் குடியிருப்பில் சோதனை நடத்தி, அப்துல் ரஹ்மான் மற்றும் அவரது நண்பர் சரண்ராஜ், 26 ஆகியோரை கைது செய்தனர். விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, இருவரையும் சிறையில் அடைத்தனர். தப்பியோடிய மூவரை தேடி வருகின்றனர்.