/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் பைக் திருட்டு போலீசார் விசாரணை
/
செங்கையில் பைக் திருட்டு போலீசார் விசாரணை
ADDED : மே 30, 2024 12:52 AM
செங்கல்பட்டு:சிங்கபெருமாள் கோவில் அடுத்த ஜெ.ஜெ., நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி,36. மறைமலை நகரில் காய்கறி கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் தன் மகளுக்கு, பள்ளி கட்டணம் செலுத்த, தனது 'ஹீரோ மேஸ்ட்ரோ' இருசக்கர வாகனத்தில் சென்றார்.
பள்ளி வளாகத்தின் அருகில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். திரும்பி வந்து பார்த்த போது, மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து, ஜெயலட்சுமி செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறனர்.