/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குடிநீர் கிணறு அமைக்க பூஞ்சேரி மக்கள் கோரிக்கை
/
குடிநீர் கிணறு அமைக்க பூஞ்சேரி மக்கள் கோரிக்கை
ADDED : மார் 09, 2025 11:40 PM
செய்யூர், பவுஞ்சூர் அடுத்த வீரபோகம் ஊராட்சியில் வீரபோகம், பூஞ்சேரி, பாக்கூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
ஊராட்சியில் 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கிராம மக்களுக்கு பாக்கூர் ஏரிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக்கிணறு மூலமாக, பூஞ்சேரி, மணல்மேடு மற்றும் பாக்கூர் ஆகிய கிராமங்களில் உள்ள 3 மேல்நிலைக் குடிநீர் தேக்கத் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு குழாய்கள் மூலமாக தினசரி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக கோடைகாலத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, ஆழ்துளை கிணற்றில் போதிய தண்ணீர் இல்லாமல் பூஞ்சேரி பகுதியில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு, தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
பூஞ்சேரி ஏரிக்கரை பகுதியில் புதிய குடிநீர் கிணறு அமைத்து கோடை காலத்தில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாட்டை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு அளித்தும் தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஆகையால் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, பூஞ்சேரி பகுதியில் குடிநீர் கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.