/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சகதியான சிமென்ட் சாலை செம்மஞ்சேரியில் அவஸ்தை
/
சகதியான சிமென்ட் சாலை செம்மஞ்சேரியில் அவஸ்தை
ADDED : செப் 01, 2024 11:58 PM
செம்மஞ்சேரி : சோழிங்கநல்லுார் மண்டலம், 200வது வார்டு, செம்மஞ்சேரி, ஜெவகர்நகர், எழில்முக நகரில் 1,500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஓ.எம்.ஆரில் இருந்து, 2.5 கி.மீ., பயணித்து, இந்த பகுதிக்கு செல்ல வேண்டும்.
நீண்ட நாட்களாக மண் சாலையாக இருந்த இந்த வழித்தடம், சமீபத்தில் சிமென்ட் சாலை போடப்பட்டது. இதனால், மழை நேரத்தில் மக்களின் சிரமம் குறைந்தது.
இந்நிலையில், அங்குள்ள குளம் மற்றும் காலி இடங்களில் இருந்து, லாரியில் மண் எடுத்து செல்லப்படுகிறது. இந்த மண் சாலையில் சிதறுவதால், லேசான மழைக்கே சகதி சாலையாக மாறிவிடுகிறது. இதனால், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் வழுக்கி விழுகின்றனர்.
சமீபத்தில் இரண்டு முதியவர், ஒரு மூதாட்டி விழுந்து காயமடைந்தனர். பள்ளி மாணவ, மாணவியரும் நிலைதடுமாறி விழுகின்றனர்.
தவிர, கனரக வாகனங்கள் அதிகளவில் செல்வதால், புதிதாக போடப்பட்ட சாலையும் சேதமடைந்துள்ளது. மண்ணை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிமக்கள் கூறினர்.