/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஊரப்பாக்கத்தில் மோசமான சாலையால் அவஸ்தை
/
ஊரப்பாக்கத்தில் மோசமான சாலையால் அவஸ்தை
ADDED : ஆக 17, 2024 07:48 PM
கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி, 12வது வார்டுக்கு உட்பட்ட வள்ளியம்மை தெருவில், சிமென்ட் சாலை அமைக்கப்பட்டு, பல ஆண்டுகள் ஆகின்றன.
தற்போது, அச்சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற முறையில், மேடும் பள்ளமாகவும், குண்டும் குழியுமாகவும் உள்ளது. தற்போது பெய்த மழை நீர், சாலையில் உள்ள பள்ளங்களில் தேங்கியுள்ளது. அதனால், இருசக்கர வாகனத்தில் செல்வோர் சிரமம் அடைகின்றனர்.
மேலும், தேங்கிய மழை நீரில் கொசுக்கள் உற்பத்தி ஆவதால், அப்பகுதி முழுதும் கொசு தொல்லை அதிகரித்து, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
எனவே, சாலையை சீரமைத்து தரக்கோரி, ஊராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதிவாசிகள் புகார் மனு அளித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, சேதமான சாலையை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.