/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பொத்தேரி சர்வீஸ் சாலை ஆக்கிரமிப்பு விபத்தில் சிக்கிய வாகனங்களால் அவதி
/
பொத்தேரி சர்வீஸ் சாலை ஆக்கிரமிப்பு விபத்தில் சிக்கிய வாகனங்களால் அவதி
பொத்தேரி சர்வீஸ் சாலை ஆக்கிரமிப்பு விபத்தில் சிக்கிய வாகனங்களால் அவதி
பொத்தேரி சர்வீஸ் சாலை ஆக்கிரமிப்பு விபத்தில் சிக்கிய வாகனங்களால் அவதி
ADDED : பிப் 24, 2025 01:01 AM

மறைமலைநகர்,:தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையம், பொத்தேரி பகுதியில், ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி செயல்பட்டு வருகிறது.
மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, ஓட்டேரி, கிளாம்பாக்கம் உள்ளிட்ட காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் விபத்தில் சிக்கும் வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, இங்கு கொண்டு வந்து நிறுத்தப்படுகின்றன.
காவல் நிலையம் அருகில் போதிய அளவில் இடவசதி இல்லாததால், அதிக வாகன போக்குவரத்து நிறைந்த பொத்தேரி ஜி.எஸ்.டி., சாலையின் அணுகு சாலையில் நிறுத்தப்படுகின்றன.
இதனால், மற்ற வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
இந்த பகுதியில் உள்ள தனியார் பல்கலை மற்றும் தனியார் மருத்துவமனைக்கு, சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும், தினமும் ஆயிரக்கணக்கானோர் வாகனங்களில் வந்து செல்கின்றனர்.
இவர்கள் வேகமாக வந்து திரும்பும் போது, அணுகு சாலையில் நிறுத்தப்பட்டு உள்ள விபத்தில் சிக்கிய சரக்கு வாகனங்கள், தனியார் பேருந்துகள், வேன், கார் போன்ற வாகனங்கள், சக வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்து வருகின்றன.
எனவே, பெரும் விபத்து ஏற்படும் முன், இந்த பகுதியில் நிறுத்தப்பட்டு உள்ள அந்த வாகனங்களை அகற்ற, காவல் துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

