/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குண்டும் குழியுமான சாலைகளால் கரிக்கிலியில் போக்குவரத்து பாதிப்பு
/
குண்டும் குழியுமான சாலைகளால் கரிக்கிலியில் போக்குவரத்து பாதிப்பு
குண்டும் குழியுமான சாலைகளால் கரிக்கிலியில் போக்குவரத்து பாதிப்பு
குண்டும் குழியுமான சாலைகளால் கரிக்கிலியில் போக்குவரத்து பாதிப்பு
ADDED : செப் 09, 2024 06:24 AM
மதுராந்தகம்: அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்டு, கரிக்கிலி ஊராட்சி அமைந்துள்ளது. கரிக்கிலி ஊராட்சியில் அண்ணா நகர், கொளத்துார் சித்தாமூர், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட குக்கிராமங்கள் உள்ளன.
இதில், கரிக்கிலி - சித்தாமூர் இணைப்பு சாலை, கன்னியம்மன் கோவில் சாலை ஆகியவை மண் சாலையாக உள்ளதால், அவற்றை சிமென்ட் சாலையாக அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சித்தாமூர் கிராமம், மாரியம்மன் கோவில் தெரு, பள்ளத்தெரு, பஜனை கோவில் தெரு மற்றும் கிருஷ்ணாபுரம் கிராமத்தில் பெருமாள் கோவில் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, கொளத்துார் கிராமத்தில் டேங்க் தெரு, கரிக்கிலி ஊராட்சியில் மாரியம்மன் கோவில் தெரு, அண்ணா நகரில் நடுத்தெரு உள்ளிட்ட சாலைகள், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் சிமென்ட் சாலையாக அமைக்கப்பட்டது.
தற்போது, குண்டும் குழியுமாகவும், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி, பயன்படுத்த முடியாதவாறு சாலை உள்ளது. அதனால், சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவ - மாணவியர், சாலையை கடக்க அவதிப்படுகின்றனர்.
ஆகையால், பழைய சிமென்ட் சாலையை அகற்றிவிட்டு, புதிதாக சிமென்ட் கல் சாலை அமைத்து தர, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.