/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கல்பாக்கத்தில் மீண்டும் மின் உற்பத்தி
/
கல்பாக்கத்தில் மீண்டும் மின் உற்பத்தி
ADDED : மார் 05, 2025 01:52 AM
கல்பாக்கம்,:இந்திய அணுமின் கழகத்தின்கீழ், கல்பாக்கத்தில், சென்னை அணுமின் நிலையம் இயங்குகிறது. இங்கு தலா 220 மெ.வா., மின் உற்பத்தி திறனில், யூனிட் - 1, யூனிட் - 2 ஆகியவை உள்ளன.
யூனிட் - 1ல், 2018ல் தொழில்நுட்ப பழுது ஏற்பட்டது. தற்போது வரை பழுதை சரிசெய்ய இயலாமல், மின் உற்பத்தி இன்றி முடங்கியுள்ளது.
யூனிட் - 2ல் மட்டுமே இயங்கி, முழுதிறனில், மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த யூனிட்டில், கடந்த ஜன., மாத இறுதியில், தொழில்நுட்ப பழுது ஏற்பட்டதால், ஜன., 31ம் தேதி உற்பத்தி நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து, பழுதை சரிசெய்வது, பராமரிப்பது என, பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இப்பணிகள் முடிந்து, மீண்டும் மின் உற்பத்தி துவக்கப்பட்டதாக, அனுமின் நிலைய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.