/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மரக்கிளைகளில் சிக்கிய மின்கம்பிகள்; பூஞ்சேரியில் மின் வினியோகம் பாதிப்பு

ADDED : ஆக 16, 2024 11:54 PM

மாமல்லபுரம் : மாமல்லபுரம், பூஞ்சேரி பகுதியில், புதுச்சேரி சாலையை ஒட்டி, உயரழுத்த, தாழ்வழுத்த மின்தடங்கள் அமைந்துள்ளன.
சாலையை ஒட்டி, மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ள நிலையில், மரக்கிளைகள் இடையே மின்தடங்கள் சிக்கியுள்ளன. மரக்கிளைகள் காற்றில் அசைந்தால், மின்தடம் அடிக்கடி பாதிக்கப்பட்டு, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, அடிக்கடி மின் வினியோகம் பாதிக்கப்படுகிறது.
அதே பகுதியில், பேரூராட்சி நிர்வாகத்தின்கீழ் உள்ள பொது திறந்தவெளி பகுதி பூங்கா வளாக மின்மாற்றியையும் புதர் சூழ்ந்துள்ளது. அதனால், மின் பழுது ஏற்பட்டால், மின்மாற்றியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இயலாத நிலையும் உள்ளது.
எனவே, தடையற்ற மின் வினியோகம், மின்தட பாதுகாப்பு கருதி, மின் தடங்களை சூழ்ந்துள்ள மரக்கிளைகள், மின்மாற்றியை சூழ்ந்துள்ள புதரை அகற்ற, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதிவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.