/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கார் மோதி சாய்ந்த மின்கம்பம் கூடுவாஞ்சேரியில் மின் தடை
/
கார் மோதி சாய்ந்த மின்கம்பம் கூடுவாஞ்சேரியில் மின் தடை
கார் மோதி சாய்ந்த மின்கம்பம் கூடுவாஞ்சேரியில் மின் தடை
கார் மோதி சாய்ந்த மின்கம்பம் கூடுவாஞ்சேரியில் மின் தடை
ADDED : ஆக 03, 2024 01:37 AM

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி, அருள் நகர் 40 அடி சாலையில், நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு, அவ் வழியாக சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின் கம்பத்தின் மீதுமோதியது.
மோதிய வேகத்தில் மின் கம்பம் சாய்ந்து, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இது குறித்து, முதலாவது வார்டு கவுன்சிலர் மு.நாகேஸ்வரன், மின் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். ஊரப்பாக்கம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன்,சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சாய்ந்த நிலையில்இருந்த மின்கம்பத்தை சீரமைத்து, மின்வினியோகம் வழங்கப்பட்டது.
இதனால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, மின்சாரமின்றி அப்பகுதிவாசிகள் சிரமம் அடைந்தனர்.
மேலும், விபத்தை ஏற்படுத்தி சென்ற கார் உரிமையாளர் யார் என்பது குறித்து, கூடுவாஞ்சேரி போலீசார் விசாரித்துவருகின்றனர்.