/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அபாய நிலையில் மின் கம்பங்கள் மேய்ச்சல் கால்நடைகளுக்கு ஆபத்து
/
அபாய நிலையில் மின் கம்பங்கள் மேய்ச்சல் கால்நடைகளுக்கு ஆபத்து
அபாய நிலையில் மின் கம்பங்கள் மேய்ச்சல் கால்நடைகளுக்கு ஆபத்து
அபாய நிலையில் மின் கம்பங்கள் மேய்ச்சல் கால்நடைகளுக்கு ஆபத்து
ADDED : ஆக 07, 2024 02:25 AM

கூடுவாஞ்சேரி,
நந்திவரம்- நந்தீஸ்வரர் கோவில் எதிரில், ஹிந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான, 16 ஏக்கர் நிலம்உள்ளது.
இந்த இடத்தை, ஹிந்து அறநிலையத் துறை சார்பில் குத்தகைக்கு விடப்பட்டு, அதில் விவசாயம் செய்யப்படுகிறது.
சமீப காலமாக, அதில் விவசாய பணிகள் நடக்கவில்லை. தற்போது, அந்த இடத்தில் புற்கள் அதிகமாக வளர்ந்துள்ளதால், ஆடுகள், மாடுகள் மேய்ச்சலுக்கு வருகின்றன.
இப்பகுதியில், ஐந்துக் கும் மேற்பட்ட மின் கம்பங்கள், சாய்ந்து அபாய நிலையில் உள்ளன. லேசான காற்று வீசினாலும் விழும் நிலையில் உள்ள மின் கம்பங்களால், விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இது குறித்து, அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:
இப்பகுதியில் உள்ள இடத்தில், தெற்கு பகுதியில் சிறிய தாங்கல் ஏரியும், வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் தாங்கல் ஏரியும் உள்ளன. இதில், நெற் பயிர்கள் பயிரிடப்பட்டு வந்தது.
தற்போது, அதில் விவசாய பணிகள் நடைபெறவில்லை. புற்கள் செழித்து வளர்ந்துள்ளதால், இப்பகுதிவாசிகள் தங்களின் ஆடு, மாடுகளை இப்பகுதியில் மேய்ச்சலுக்கு கொண்டு வருகின்றனர்.
ஆனால், இப்பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்த நிலையில் அபாயகரமாக உள்ளன.
அவை, லேசாக காற்று அடித்தாலும், விழுந்து மின் விபத்து ஏற்பட்டு, மேய்ச்சலில் இருக்கும் கால்நடைகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து, மின்வாரியஅலுவலகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும், மின் கம்பங்களை சீரமைக்க, இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, மாவட்டநிர்வாகம் தலையிட்டு, இப்பகுதியில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பங்களை அகற்றி, புதிய மின் கம்பங்களை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள்கூறினர்.