/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பேருந்து நிறுத்தங்களில் நிழற்பந்தல்: பயணியர் வரவேற்பு
/
பேருந்து நிறுத்தங்களில் நிழற்பந்தல்: பயணியர் வரவேற்பு
பேருந்து நிறுத்தங்களில் நிழற்பந்தல்: பயணியர் வரவேற்பு
பேருந்து நிறுத்தங்களில் நிழற்பந்தல்: பயணியர் வரவேற்பு
ADDED : மே 04, 2024 10:40 PM

சென்னை:சென்னையில் கோடை வெயில் சுட்டெரித்து வருவதால், தலைச்சுற்றல், நாக்கு வறண்டு போதல், மயக்கம், உடல் சோர்வு போன்ற பாதிப்புகளால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தற்போது மெட்ரோ பணிகள் நடைபெறுவதால், பல்வேறு இடங்களில் இருந்த பேருந்து நிழற்குடைகள் அகற்றப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்கள் நீண்டநேரம் வெயிலில் அவதிப்படும் நிலை ஏற்படுகிறது. சிலர் மயக்கமடைதல் போன்றவற்றாலும் அவதிப்பட்டனர்.
இந்நிலையில், பேருந்து நிழற்குடை போதியளவு இல்லாத இடங்களில், மாநகராட்சி சார்பில் நிழற்பந்தல் நேற்று முதல் அமைக்கப்பட்டு வருகிறது. இதுவரை 20க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
தொடர்ந்து, சிக்னல்களில் பச்சை விளக்கு எரியும் வரை காத்திருக்கும் வாகன ஓட்டிகளுக்கு, 'பசுமை நிழற்பந்தல்' புதுச்சேரி மாநிலத்தை பின்பற்றி அமைக்க, சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. விரைவில், அதற்கான பணிகளும் நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.