/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆரம்ப சுகாதார நிலையம் இருளில் மூழ்குவதால் அவதி
/
ஆரம்ப சுகாதார நிலையம் இருளில் மூழ்குவதால் அவதி
ADDED : மார் 01, 2025 11:35 PM
பவுஞ்சூர்,பவுஞ்சூர் பஜார் வீதியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது.
திருவாதுார், இரணியசித்தி, விழுதமங்கலம், கடுகுப்பட்டு போன்ற 20க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பிரதான அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக உள்ளது.
தினமும் நுாற்றுக்கணக்கான மக்கள் அவசர சிகிச்சை, முதலுதவி, பொது மருத்துவம், மகப்பேறு, நோய்த்தடுப்பு என பல்வேறு சேவைகளுக்காக வந்து செல்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே, உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது.
முறையான பராமரிப்பு இல்லாமல், கடந்த ஓராண்டாக இந்த உயர்கோபுர மின்விளக்கு பழுதடைந்து உள்ளது. இதனால், ஆரம்ப சுகாதார நிலைய நுழைவாயில் பகுதி முழுதும், இருளில் மூழ்குகிறது.
இதனால், இரவு நேரத்தில் சுகாதார நிலையத்திற்கு வந்து செல்வோர் சிரமப்படுகின்றனர்.
எனவே, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இப்பகுதியில் ஓராண்டாக பழுதடைந்துள்ள உயர்கோபுர மின்விளக்கை சீரமைக்க வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.