/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பிரதமரின் ஜென்மன் திட்டம் : செங்கையில் நலத்திட்ட உதவி
/
பிரதமரின் ஜென்மன் திட்டம் : செங்கையில் நலத்திட்ட உதவி
பிரதமரின் ஜென்மன் திட்டம் : செங்கையில் நலத்திட்ட உதவி
பிரதமரின் ஜென்மன் திட்டம் : செங்கையில் நலத்திட்ட உதவி
ADDED : செப் 09, 2024 11:53 PM
செங்கல்பட்டு : செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், பழங்குடியினருக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா, கடந்த 3ம் தேதி நடந்தது. இந்த விழாவில், பல்வேறு உதவிகள் வழங்கக்கோரி, பழங்குடியினர் மனு அளித்தனர்.
இந்நிலையில், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், ஆதிதிராவிடர் நலத்துறையின் வாயிலாக, பிரதம மந்திரியின் ஜென்மன் திட்டத்தின் கீழ், பல்வேறு துறைகளின் சார்பாக, ஏழு பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டையும், 24 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டையும் வழங்கப்பட்டன.
அதோடு, 16 பயனாளிகளுக்கு புதிய வங்கி கணக்குகளையும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மூன்று நபர்களின் வாரிசுதாரர்களுக்கு, 30 லட்சம் ரூபாய் நிதி உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகளை, கலெக்டர் அருண்ராஜ், நேற்று வழங்கினார்.