/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை புத்தக திருவிழா நிறைவு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு
/
செங்கை புத்தக திருவிழா நிறைவு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு
செங்கை புத்தக திருவிழா நிறைவு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு
செங்கை புத்தக திருவிழா நிறைவு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு
ADDED : பிப் 28, 2025 11:49 PM

செங்கல்பட்டு, செங்கல்பட்டு புத்தக திருவிழாவில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை, மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், நேற்று வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம் இணைந்து, ஆறாவது ஆண்டு செங்கை புத்தக திருவிழா, கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், செங்கல்பட்டு சி.எஸ்.ஐ., அலிசன்காசி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், கடந்த 20ம் தேதி துவங்கி, நேற்று நிறைவு பெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் சேக் முகையதீன், கூடுதல் கலெக்டர் நாராயணசர்மா, மாவட்ட வழங்கல் அலுவலர் சாகிதா பர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் அன்பரசன் துவக்கி வைத்தார். கடந்த ஒன்பது நாட்களாக நடந்த புத்தக திருவிழாவில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் 17,000 பேர் மற்றும் 30,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர். புத்தக திருவிழா அரங்கில் கட்டுரைப் போட்டி, சுற்றுச்சூழல் சம்பந்தமான கட்டுரைகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு, பரிசு மற்றும் சான்றிதழ்களை, கலெக்டர் அருண்ராஜ், நேற்று வழங்கினார். முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், மாவட்ட வழங்கல் அலுவலர் சாகிதா பர்வீன், முதன்மை கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர்கள் உதயகுமார், சிவக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.