/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்த மூவருக்கு காப்பு
/
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்த மூவருக்கு காப்பு
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்த மூவருக்கு காப்பு
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்த மூவருக்கு காப்பு
ADDED : ஏப் 28, 2024 06:37 AM
செய்யூர் : செய்யூர் அருகே வேட்டைக்காரகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த 31 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண், படாளத்தில் உள்ள தனியார் மனநல காப்பகத்தில் இருந்து வந்துள்ளார்.
கோடை விடுமுறை காரணமாக, 10ம் தேதி சொந்த ஊரான வேட்டைக்காரகுப்பம் கிராமத்திற்கு வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 16ம் தேதி மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, அவரது தாய் குளிக்க வைத்த போது, உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன. இதையடுத்து, உடனடியாக அந்த பெண்ணை, பவுஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்,
அங்கு முதலுதவிக்கு பின், மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, அவரது உறவினர்கள் 18ம் தேதி செய்யூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். செய்யூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இது தொடர்பாக, பெருமாள்சேரியைச் சேர்ந்த தினேஷ், 27, விக்னேஷ், 23, மூர்த்தி, 21, ஆகிய மூன்று வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், மதுபோதையில் இருந்த தினேஷ், விக்னேஷ், மூர்த்தி மற்றும் கார்த்திக், 28, ஆகிய நான்கு பேரும், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை ஏமாற்றி கிராமத்தில் உள்ள ஏரிக்கரைக்கு அழைத்துச் சென்று, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து, வழக்கு பதிந்து போலீசார், நேற்று மூவரையும் கைது செய்து, செய்யூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள கார்த்திக் என்பவரை தேடி வருகின்றனர்.

