/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கள்ளச்சாராயம் விற்ற இருவருக்கு 'காப்பு'
/
கள்ளச்சாராயம் விற்ற இருவருக்கு 'காப்பு'
ADDED : ஜூன் 22, 2024 11:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி : திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அடுத்த பாண்டரவேடு காலனி பகுதியில் ஆந்திராவில் இருந்து கள்ளச்சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மாவட்ட எஸ்.பி., ஸ்ரீநிவாசாபெருமாள் உத்தரவின்படி ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் நேற்று அப்பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்பகுதியை சேர்ந்த ஆறுமுகம், 55, பஞ்சேஸ்வரி, 48, ஆகியோர் தங்களது வீட்டில் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அவர்களிடம் இருந்து 15 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.